இந்தியா பிரதான செய்திகள்

திருப்பதியை அச்சுறுத்துகிம் தீவிரவாதிகளை கண்காணிக்க 1400 கமராக்கள்…

திருப்பதிக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் பல முக்கிய பகுதிகளில் 1400 கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  திருமலை நடைபாதை மார்க்கங்கள் மாடவீதிகள், முக்கிய சந்திப்புகள், திருப்பதியில் உள்ள பல முக்கிய பகுதிகளில் 1400 கண்காணிப்பு கமராக்கள் பொருத்டதப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

4 கட்டங்களாக பிரித்து அதிகாரிகள் கமராக்களை பொருத்தி வருவதாகவும் முதல் கட்டமாக 256 கமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதிக்குள், முதல்கட்ட பணிகள் நிறைவுறும் எனவும் விரைவில் 4 கட்டப் பணிகளும் நிறைவு பெற்று, எதிர்வரும் ஜுன் மாத இறுதிக்குள் முழுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் திருமலை மற்றும் திருப்பதி கொண்டு வரப்பட உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.