பிரதான செய்திகள் விளையாட்டு

சிம்பாப்வே அணிக்கு எதிரான 20க்கு 20 கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது..

சிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது

சிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் 17 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது சார்ஜாவில் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றியீட்டிருந்தது.

இந்தநிலையில் சார்ஜாவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அணி முதலில் துப்பாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, 159 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்தநிலையில ஆப்கானிஸ்தான் அணி 17 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியதுடன் தொடரையும் 2-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகனாக மொகமது நபி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link