சினிமா பிரதான செய்திகள்

அஜித்துடன் முதன்முறையாக இணையும் இமான்

அஜித்தின் விசுவாசம் படத்துக்கு இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தவகையில் அஜித்துடன் இமான் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விசுவாசம் ஆகும். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


விவேகம் படத்துக்கு முன்னர் இசையமைப்பாளராக அறிவிக்க யுவன் சங்கர்ராஜா சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து விலகினார். இதனால் இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்த நிலையில் மீண்டும் அனிருத்தான் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. எனினும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இமான் அஜித் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இந்தப் படத்தின் கதாநாயகி யார் என பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது நயன்தாராதான கதாநாயகி என அறிவிக்கப்பட்டுள்ளது. பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடிக்கிறார்.


விவேகம் படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Add Comment

Click here to post a comment

Leave a Reply