இந்தியா பிரதான செய்திகள்

நளினி, முருகன், பேரறிவாளனை விடுவிக்க அதிகாரிகள் பரிந்துரை


வேலூர் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள நளினி-முருகன், பேரறிவாளன் உட்பட 200 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.    தமிழக சிறைச்சாலைகளில் கடந்த சில ஆண்டுகளாக அண்ணா பிறந்த தினம், காந்தி ஜெயந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாட்களில் நன்னடத்தை கைதிகள் விடுவிக்கப்படவில்லை.

இதனால் தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தின் 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்திருந்தார்.

அதில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது எனவும் அதற்கான பட்டியலை தயாரித்து வழங்கும்படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.  இந்தநிலையில் தமிழக சிறைச்சாலைகளில் ஆயுள்தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் இந்திய முன்னாள் ஜனாதிபதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், பெண்கள் சிறையில் உள்ள நளினி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர் என தெரிவிப்பட்டுள்ளது

எனினும் அரசிடம் தாங்கள் அனுப்பி வைத்த பட்டியலில் உள்ளவர்கள் குறித்து நன்னடத்தை அதிகாரிகள் பரிசீலித்து யாரை விடுதலை செய்ய வேண்டும் என்று இறுதி செய்து உத்தரவிட்ட பிறகே முடிவு செய்யப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.