குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக கைது செய்யப்பட்டு ரயலட்பார் நீதிமன்றால் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்ட போதும், காவற்துறை ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் தொடர்ந்து விளக்கமறியலில் உள்ள பூபாலசிங்கம் இந்திரகுமாரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உள்ளது.
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து மன்றுக்கு உரிய பதில் கிடைக்க வில்லை என தெரிவித்த நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Add Comment