உலகம் பிரதான செய்திகள்

தண்ணீர் முற்றிலும் தீர்ந்து போகும் நிலையிலிருந்த கேப் டவுன் மக்களுக்கு விவசாயிகள் அமைப்பு தண்ணீர் வழங்கியுள்ளது

தண்ணீர் பஞ்சத்தால் தண்ணீர் முற்றிலும் தீர்ந்து போகும் நிலையான டே ஜீரோ ( Day zero ) வை நோக்கிச் சென்று கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மக்களுக்கு விவசாயிகள் அமைப்பான க்ரோன்லேண்ட் நீர் பயனர் சங்கத்தினர் சுமார் 10,000 மில்லியன் லீற்றர் நீரை இலவசமாக திறந்துவிட்டுள்ளனர்.  இந்த விவசாய அமைப்பின் செயலால் கேப் டவுன் மக்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தற்காலிகமான தீர்வு கிடைத்துள்ளது.

தங்களிடம் தண்ணீர் இருக்கும் போது ஏன் அடுத்த எல்லையில் தண்ணீர் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கக் கூடாது என நினைத்து தண்ணீரை வழங்கியதாக குறித்த வஜிவசாய அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.  சுமார் 10,000 மில்லியன் லீற்றர் தண்ணீரை திறந்து விட்டிருப்பதாகவும் தங்கள் பகுதியில் மழை பெய்யாவிட்டால் தாங்களும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் நோக்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

க்ரோன்லேண்ட் விவசாயிகள் அமைப்பு திறந்துவிட்டுள்ள தண்ணீர் பல சிறிய அணைகளைக் கடந்து கேப் டவுனை இன்னும் சில தினங்களில் சென்றடையவுள்ளது. சுமார் 40 லட்சம் பேர் வாழும் கேப் டவுன் நகரில் தண்ணீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும் உலகிலேயே தண்ணீர் தீர்ந்துபோகும் முதல் முக்கிய நகரமாக கேப் டவுன் மாறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க கேப்டவுன் நகரில் தண்ணீர் பஞ்சம்…..

Add Comment

Click here to post a comment

Leave a Reply