இலங்கை பிரதான செய்திகள்

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஒழுக்கசீலராம் விசாரணையும் தேவை இல்லையாம்..

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அவருக்கு எதிராக விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான தேவை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி இடைநிறுத்தம் செய்ய இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு அந்த பணி நிறுத்த உத்தரவை இரத்து செய்து மீண்டும் பணியில் அமர்த்தியிருந்தார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து தேடிப் பார்க்கும் போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எவ்வித ஒழுக்க மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் அவருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான எவ்வித தேவையும் இல்லை எனவும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.