இந்தியா பிரதான செய்திகள்

மீனாட்சி அம்மன் கோயில் வளாக கடைகளை அகற்றுமாறு கடிதம் அனுப்பப்பட்டது…

மதுரை   மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கடந்த வாரம் தீவிபத்து நடைபெற்றதை அடுத்து அங்குள்ள 115 கடைகளையும் அகற்றுமாறு கோரி கோயில் இணை ஆணையர் நாகராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடந்த வாரம் ஒரு கடையில் ஏற்பட்ட தீயானது ஏனைய கடைகளுக்கும் பரவியதில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ளன.  மேலும்  கோயில் வளாகத்தில் இரவு கடையை மூடும் போது ஒருவர் கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றியமை அங்குள்ள சிசிடிவி கமராவில் தெரிந்ததனை தொடர்ந்து அவரிடம் விசார இடம்பெற்று வருகின்றது. இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் இன்று காலைக்குள் அகற்றி விடுமாறு செய்ய கோயில் இணை ஆணையர் நாகராஜன் கடிதம் அனுப்பியுள்ளார். எனினும் கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்ற மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply