இந்தியா பிரதான செய்திகள்

தாயின் உடலை அடக்கம் செய்வதற்காக பிச்சையெடுத்த திண்டுக்கல் சிறுவர்கள்:

இறந்துபோன தாயின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் சிறுவர்கள் பிச்சை எடுத்த சம்பவம் ஒன்று தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப் பகுதியில் வசித்த கணவனை இழந்த விஜயா  என்பருக்கு மூன்று மகன்கள். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விஜயாவை அவர்களது மூன்று மகன்கள் மட்டுமே கவனித்து வந்து நிலையில் தமது தாயின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் அந்த மூன்று சிறுவர்களும் பிற நோயாளிகளிடம் பிச்சை எடுத்துள்ளனர்.
சிறுவர்கள் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சிலரது உதவியுடன்  தாயின் உடலை மூன்று சிறுவர்களும் அடக்கம் செய்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply