உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

அதிக சம்பளம் கொடுக்கத் தயாராக இருந்த சீன சுப்பர் லீக் கழகத்தினை நிராகரித்த மெஸ்ஸி

அதிக சம்பளம் கொடுக்க தயாராக இருந்த போதும் சீன சுப்பர் லீக் கழகத்தின் அழைப்பினை லயனல் மெஸ்சி நிராகிhத்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக உள்ள அர்ஜென்டினாவைச் சேர்ந்த லயனல் மெஸ்சி ஸ்பெயினின் பார்சிலோனாவிற்காக இளம் வயதில் இருந்தே தொடர்ந்து விளையாடி வருகிறார்.

கடந்த வருடம் 2021-வரை பார்சிலோனா அணியுடனான ஓப்பந்தத்தினை மெஸ்சி நீடித்திருந்தார். இதன்போது பார்சிலோனா மெஸ்சிக்கான விலையாக 600 மில்லியன் பவுண்ஸ்களை நிர்ணயித்திருந்தது.  இந்நிலையில் சீன சுப்பர் லீக் கழகம் மெஸ்சியை வாங்க விருப்பம் தெரிவித்து மெஸ்சிக்காக பார்சிலோனாவிற்கு 622 மில்லியன் பவுண்ஸ்களை கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது. அத்துடன் மெஸ்சிக்கு ஒரு வாரத்திற்கு 1.7 மில்லியன் பவுண்ஸ்கள் சம்பளம் வழங்கவும் தயராக இருந்தது.

எனினும் பணத்திற்காக புகழை இழக்க முடியாது எனவும் பார்சிலோனா அணியில் விளையாடினால்தான் புகழ் கிடைக்கும் என்பதியாலும் மெஸ்சி அந்த வாய்ப்பை நிராகரித்துவி்ட்டார். தற்போதும் உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மெஸ்சிதான் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply