உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகின்றன

தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான ஆரம்ப விழாவுடன் நாளை ஆரம்பமாகவுள்ளன. இந்தப் போட்டியில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீர, வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.  ஆரம்பவிழா நிகழ்ச்சிகள் நாளை நடைபெறும் என்ற போதிலும் ஒருசில பிரிவுகளில் போட்டிகள் இன்றே ஆரம்பிக்கப்படுகின்ற இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 25ம் திகதி வரை நடைபெறவுள்ளன.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சின்னமாக தென் கொரியவின் புராணக் கதைகளிலும், கலாச்சாரத்திலும் நேருங்கிய தொடர்பினைக் கொண்டதாக காணப்படும் வெள்ளைப்புலி காணப்படுகின்றது.  தென் கொரியாவுடன், தீவிர பகை நாடான வட கொரியாவும் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply