இலங்கை பிரதான செய்திகள்

உதயங்க விடுதலை செய்யப்பட்டமை குறித்து தெரியாது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உதயங்க வீரதுங்க விடுதலை செய்யப்பட்டமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்p அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அண்மையில் அமெரிக்காவிற்கு பயணித்துக் கொண்டிருந்த போது டுபாயில் வைத்து சர்வதேச காவல்துறையினர் , உதயங்க வீரதுங்கவை கைது செய்திருந்தனர்.

மேலும் உதயங்கவை இலங்கைக்கு அழைத்துவர காவல்துறை குழுவொன்று டுபாய்க்கு பயணம் செய்திருந்தது. இந்த நிலையில், போதியளவு சாட்சியங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் தாம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உதயங்க தெரிவித்திருந்தார்.  எனினும், இந்த விடயம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.