சினிமா பிரதான செய்திகள்

ஐஸ்வர்யா ராய் எனக்கு மருமகள் இல்லை – அமிதாப்பச்சன்

ஐஸ்வர்யா ராய் தனக்கு மருமகள் மட்டுமல்ல மகளாகவும் நல்ல தோழியாகவும் இருப்பதாக நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் பொது விழாக்களுக்கு சென்றால் சிறப்பாக இருக்கும் எனக் கருதி இருவரையும் சேர்த்தே விழாக்களுக்கு அழைக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது திரையுலக அனுபவங்கள் குறித்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வயது அதிகமாகும்போது உண்மை பேசும் கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் எனவும் தனக்கு இப்போது 75 வயது ஆகிறது எனவும் இனிமேல் சமூகத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை சொல்லும் படங்களில் நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தனது நடிப்பு பயணத்தில் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது எனவும் தெரிவித்த அவர் தான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகர்கள் ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருந்தது எனவும் இன்றுள்ள இளம் நடிகர்கள் கஷ்டப்படுவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தாங்கள் வீட்டில் இருக்கும்போதும் வெளியே போகும்போதும் நடிப்பு பற்றியே யோசிப்போம். பயிற்சிகளும் எடுப்போம் எனவும் ஆனால் இன்றுள்ள இளம் நடிகர்கள் கஷ்டப்படுவது இல்லை. எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் எளிதாக நடித்து விடுகிறார்கள். அவர்கள் திறமைகளை பார்த்து ஆச்சரியப்படுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply