சினிமா பிரதான செய்திகள்

காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம் எடுக்கிறாரா கமல்?

றஞ்சித்தின் இயக்கத்தில் சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந் நடித்த காலா படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளதால், காலா படத்தை வெளியிட தீர்மானித்திருப்பதாகவும், அதனால் அதற்கு போட்டியாக விஸ்வரூபம் – 2 படத்தை களமிறக்க கமல் திட்டமிட்டிருப்பதாகவும் தமிழகத்தின் சினிமா தரப்பினரிடம் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஸ்வரூபம்-2 படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகளை விஸ்வரூபம் முதல்பாகம் தயாரான 2013-ம் ஆண்டிலேயே படமாக்கி விட்டபோதும் முதல் பாகத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு காரணமாக படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.  அத்துடன் நிதி நெருக்கடியால் மீண்டும் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டதனால் தயாரிப்பு பொறுப்பை கமல்ஹாசனே ஏற்று இறுதி கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்தார். தற்போது இந்த படத்துக்கான ஒலிப்பதிவு, கிரபிக்ஸ் மற்றும் டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 2.0 தள்ளிப்போகலாம் என்தனால் அதற்கு பதிலாக காலா படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காலா படத்துடன் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 மோதவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஸ்வரூபம்-2 இந்த படத்தில் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். கமல்ஹாசன் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply