இலங்கை உள்ளூராட்சி தேர்தல் 2018 பிரதான செய்திகள்

மலையகப் பிரமுகர்களும் வாக்களித்தனர்…

அமைச்சர் திகாம்பரம் மடக்கும்புரையில் வாக்களித்தார்

நடைபெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், கொழும்பிலிருந்து உலங்கு வானுர்தி மூலம் தலவாக்கலை மைதானத்திற்கு வருகை தந்து, தனது வாக்கு பதிவினை வட்டகொடை மடக்கும்புரையில் உள்ள கலாபூவணம் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.

 

அமைச்சர் இராதகிருஸ்ணன் நுவரெலியாவில் வாக்களித்தார்…

நடைபெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜராம் ஆகிய இருவரும், நுவரெலியாவில் உள்ள நல்லாயினபற்று மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.

ஆறுமுகன் தொண்டமான்  இறம்பொடை வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் வாக்களித்தார்..

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது வாக்கை இறம்பொடை வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் பதிவு செய்தார். காலை தோட்டத்தில் காணப்படும் ஆலயத்தில் நடைபெற்ற பூஜையில் தனது குடும்பத்துடன் கலந்துக் கொண்டு பின் தனது வாக்கை பதிவு செய்தமை குறிப்பிடதக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.