சினிமா பிரதான செய்திகள்

திருமணத்துக்கு பிறகும் ஓய்வு இல்லாமல் நடிப்பு – இந்த வாழ்க்கை பிடித்து இருக்கிறது – சமந்தா

நடிகை சமந்தாவுக்கும், நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்ற பின்னரும் சமந்தா சினிமாவில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் வழங்கிய செவ்வி ஒன்றில் திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று எனது கணவரோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ தடை விதிக்கவில்லை. அதனால்தான் நான் தொடர்ந்து நடிக்கிறேன். கணவரும், மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் விரும்பிய தொழிலில் நீடிப்பதில் எந்த கஷ்டமும் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா என்பது கவர்ச்சி உலகம். அதை தெரிந்துகொண்டுதான் இந்த துறைக்கு வந்தேன். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பது தவறு அல்ல. ஆனால் கவர்ச்சியை தேவை இல்லாமல் படத்தில் திணித்தால் அது பிடிக்காது. திருமணத்துக்கு பிறகும் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

விஷாலுடன் இரும்புத்திரை , விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் மற்றும் இரண்டு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளதுடன் சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்திலும் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது. கணவருடன் சண்டை போடுகிறீர்களா என்றெல்லாம் கேட்கிறார்கள் எனவும் கணவருடன் தான் சண்டை போட்டுவதாகவும் தகராறுக்கு பின்னர் தான்தான்; ; பேசி சமாதானம் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.. மேலும் நாக சைதன்யாவுக்கு ரொம்ப நல்ல மனது. அவரால் சண்டை வராது எனவுமட கலாட்டா செய்வது நான்தான் எனவும் சமந்தா தெரிவித்துள்ளார்.


அதேவேளை தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடித்து வரும் படம் ரங்கஸ்தலம் படம் 1985-ல் நடக்கும் கிராமத்து கதைமை மையமாக வைத்து உருவாகியிருக்கின்றது.  இப்படத்தில் சமந்தா கிராமத்துப் பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதன் டீஸர் யூரியுப்பில் தற்போது கலக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.