இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

ரங்கன ஹேரத் உலக சாதனை


இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை புரிந்துள்ளார். பங்களாதேஸ் அணியுடன்னான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.  டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 415 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளதன் மூலம் இடது கை சுழற் பந்து வீச்சாளார்களில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.

414 விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் அந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வசீம் அக்ரமின் சாதனையை ரங்கன ஹேரத் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்ற நிலையில் பங்களாதேஸ் அணி 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 226 ஓட்டங்களுக்கு பெற்றிருந்த நிலையில் பங்களாதேஸ் அணி 123 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. அதன்படி இலங்கை அணி 215 ஓட்டங்களால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply