இலங்கை உள்ளூராட்சி தேர்தல் 2018 பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்தவின் கட்சிக்கு அதிகளவானவர்கள் வாக்களித்துள்ளனர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கட்சிக்கு அதிகளவானவர்கள் வாக்களித்துள்ளதாகத் தெரிய வருகின்றது. அநேகமான பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்கு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகப் பற்றற்ற ரீதியில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு கனிசனமான அளவு வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலவாக்கலை லிந்துலை நகரசபை, பலப்பிட்டிய பிரதேசசபையின் வத்துகெதர வட்டாரம் உள்ளிட்டவற்றில் மலர்மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றியீட்டியுள்ளதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply