இலங்கை உள்ளூராட்சி தேர்தல் 2018 பிரதான செய்திகள்

அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடுமாறு மஹிந்த கோரிக்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமைதியான முறையில் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார். சற்று நேரத்திற்கு முன்னர் தமது இல்லத்திலிருந்து ஊடகங்களின் மூலம் இந்த விசேட கோரிக்கையை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றிக்காக பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சவால்கள், பிரச்சினைகள், அழுத்தங்களுக்கு மத்தியில் மக்கள் தமது கட்சியின் வெற்றியை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தோல்வியடைந்த தரப்பிற்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் வெற்றியாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டுமென அவர் கோரியுள்ளார். பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் ஏனையோருக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரையில் உத்தியோகபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சில மாவட்டங்களில் முன்னணி வகிப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹம்பாந்தோட்டை, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மஹிந்தவின் மலர்மொட்டு முன்னணி வகிப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply