இலங்கை உள்ளூராட்சி தேர்தல் 2018 பிரதான செய்திகள்

மைத்திரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முடிவுகள்..

குளோபல் தமிழ்ச் செய்தியார்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் கடுமையான நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. கட்சியின் சில சிரேஸ்ட அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளனர்.

இந்த அமைச்சர்கள் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையைத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது பொருத்தமாகாது என சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து சிரேஸ்ட அமைச்சர்கள் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply