இந்தியா சினிமா பிரதான செய்திகள்

அரசை கேள்வி கேட்கும் உரிமை தமக்கு உண்டு – கமல்ஹாசன்


அரசை கேள்வி கேட்கும் உரிமை தமக்கு உண்டு என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹர்வார்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக தான் அரசியலில் இருந்து வருகிறேன் எனவும் . காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்த போதும் தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புவதாகவும் மிக சிறந்த கருத்துக்களுக்காக உங்களிடம் கையேந்தி வந்திருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.. 2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் தான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்குகிறேன் எனவும் இந்த மாற்றத்துக்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன் எனவும் தெரிவித்த அவர் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்ற போவதாகவும் தெரிவித்துள்ளார்.

நானும் ரஜினியும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. எனது நோக்கமும் ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தான் எனவும் அவர் தெரிவித்துள்ள அவர் தமிழன் என்பது முகவரி தான், தகுதி அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் தமிழில் வணக்கம் எனக்கூறி உரையை ஆரம்பித்த அவர், நாளை நமதே எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார் உன்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply