குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தி;ன் உரிமையாளர் அர்ஜூன் அலோசியசிடம் சிறையில் வைத்து விசாரணை நடாத்துவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையளார் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தற்பொழுது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இந்த இருவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 13, 14 மற்றும் 15ம் திகதிகளில் விசாரணை நடாத்துவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் அர்ஜூன் மற்றும் கசுன் ஆகியோர் கைது செய்யபபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment