உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை


இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு அவுஸ்திரேலிய அணி இன்னும் தயாராகவில்லை என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டாரென்   லீமான் (Australian coach Darren Leeman)  தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவுஸ்திரேலியா, அண்மைக்காலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பின்தங்கி வருகின்றது. கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஆக்ரோஷமான அணுகுமுறை தேவை என டாரென்  லீமான்  தெரிவித்துள்ளார். உண்மையிலேயே தாங்கள் டெஸ்ட் போட்டி மீதுதான் கவனம் செலுத்தினோம் எனவும் இதனால் ; ஒருநாள் போட்டிக்கான அணியை தயார் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply