குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக இணங்கியுள்ளது என அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் மஹிந்தவுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஜனாதிபதியின் நிலைமை பலவீனமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment