இந்தியா பிரதான செய்திகள்

இந்தியாவிலேயே எளிமையான முதலமைச்சர் மாணிக் சர்க்கார்


:இந்தியாவிலேயே மிகவும் எளிமையான முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இவரின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மாநில முதலமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணிக் சர்க்காரின் சொத்து தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே மிகவும் எளிமையான முதலமைச்சர் என்பதுடன் இவர் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து இந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் 1998 முதல் கடந்த 15 வருடங்களாக திரிபுராவின் முதலமைச்சராக இருந்து வருகின்ற இவர் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்து வரும் இந்திய மாநில முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

59 வயதான மாணிக் சர்க்காருக்கு முதலமைச்சருக்கு வழங்கப்படும் சம்பளம் மட்டும் கொடுக்கப்படுகிறது. அந்த சம்பளத்தையும் அவர் கட்சி வளர்ச்சிக்கு வழங்கிவிட்டு கட்சி தரும் 5,000 ரூபாயில் வாழ்க்கையை நடத்தி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இவருக்கென்று தனியாக சொந்தமாக வீடோ, நிலமோ, நகையோ கிடையாது. இதன் காரணமாகவே இவர் பல ஆண்டுகளாக அந்த முக்கிய இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply