இந்தியா பிரதான செய்திகள்

அதிக எடையுள்ள செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முயற்சி..

அதிக எடையுள்ள செயற்கைகோள்களை தயாரித்து விண்ணில் செலுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ தற்போது 4 தொன் எடையுள்ள செயற்கைகோள்களை உயர் புவிவட்டப் பாதையிலும், 8 தொன் எடையுள்ள செயற்கைகோள்களை குறைந்த உயர புவிவட்டப் பாதையிலும் செலுத்தும் திறனைப் பெற்றுள்ளது.

இஸ்ரோவிடம் இருக்கும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ரொக்கெட்டுகள் மூலம் இவ்வளவு எடையுள்ள செயற்கைகோள்களை மட்டுமே விண்ணில் செலுத்தமுடியும்.  அதிக எடையுள்ள செயற்கைகோள்களை இஸ்ரோ தயாரிக்கும்போது, அவை தென் அமெரிக்காவின் கொருவிலுள்ள ஏரியன் விண்வெளி தளத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவிலுள்ள ஸ்பெஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனமானது, அதிக எடையுள்ள செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி புகழ்பெற்று வருகிறது.  இந்தநிலையில் எதிர்வரும் 17-ம் திகதி குறைந்த செலவிலான இன்டர்நெட் வசதியைப் பெறுவதற்கான அதிக எடையுள்ள செயற்கைகோளை விண்ணில் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply