உலகம் பிரதான செய்திகள்

சிரியாவில் அமைதி காக்கும் பணிகள் தொடர்பில் அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையில் முரண்பாட்டு நிலை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிரியாவில் அமைதி காக்கும் பணிகள் தொடர்பில் அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளும் நேட்டோ அமைதி காக்கும் நேச நாடுகளில் அங்கம் வகிக்கின்றன. எனினும், சிரிய முன்னரங்கப் பகுதியொன்றின் கட்டுப்பாடு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளதாகவும், இது ராஜதந்திர விரிசல் நிலை வரையில் வியாபித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குர்திஸ் படையினர் அமெரிக்காப் படையினருடன் இணைந்து போராடுவதனை துருக்கி விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியல் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சிகளின் போது குர்திஸ் படையினர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டிருந்தனர். இதனால் தற்பொழுது குர்திஸ் படையினர் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுவதனை துருக்கி கடுமையாக எதிர்த்து வருகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply