உலகம் பிரதான செய்திகள்

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி பத்திரிகையொன்றுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். வடகொரியாவுடன் அதிகளவிலான ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாகக் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்(Mike Pence)  தெரிவித்துள்ளார்.

வடகொரியாவுடனான ராஜதந்திர உறவுகளை விஸ்தரித்துக் கொள்வது என தென்கொரியாவும் அமெரிக்காவும் இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக தென் கொரியா வடகொரியாவுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் எனவும் அதன் பின்னர் அமெரிக்கா வடகொரியாவுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply