இலங்கை பிரதான செய்திகள்

 டுபாய் சென்ற அதிகாரிகள் வெறும் கையுடன் நாடு திரும்புவர்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் நோக்கில் டுபாய் சென்ற அதிகாரிகள் வெறும் கையுடன் நாடு திரும்ப உள்ளனர். மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட, நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரவி வைத்தியலங்கார உள்ளிட்ட அதிகாரிகள் டுபாய்க்கு விஜயம் செய்திருந்தனர்.

உதயங்கவை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் இந்த அதிகாரிகள் டுபாய் சென்றிருந்தனர். உதயங்கவை ஒப்படைப்பதற்கு டுபாய் அதிகாரிகள் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையானது ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை வரையில் தற்பொழுது விரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உதயங்கவை கைது செய்வது குறித்து இலங்கை ஐக்கிய அரபு இராச்சிய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply