உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வோர்ன்


ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 2008 முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டு அந்த அணியை சம்பியன் பட்டத்துக்கு இட்டுச் சென்றிருந்தார். இந்தநிலையில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்குத் திரும்பியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தன் கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்தில் ராஜஸ்தான் அணிக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு எனவும் ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.  இந்த முறை வலுவான, ஆற்றல் நிறைந்த இளம் வீரர்கள் அணியில் உள்ளனர் எனவும் அவர்களுடன் பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2008-2011 ஐபிஎல் தொடர்களில் ஆடிய ஷேன் வோர்ன்52 போட்டிகளில் 56 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply