இந்தியா பிரதான செய்திகள்

15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல்

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு 7.40 லட்சம் ரூபா பெறுமதியில் நவீன ரைபில் துப்பாக்கிகளை வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு தேவையான நவீன ஆயுதங்கள் வாங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்துதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்ற போதே இவ்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இலகு ரக துப்பாக்கிகள் 1,819 கோடி ரூபாய் மதிப்பிலும், ராணுவத்திற்கு 5,719 ஸ்னைப்பர் ரைபில்கள் 982 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply