உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

கொரிய ஒன்றிய ஹொக்கி அணி இதுவரையில் கோல் எதனையும் போடவில்லை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வட மற்றும் தென் கொரிய ஒன்றிய ஹொக்கி அணியினர் இதுவரையில் கோல்கள் எதனையும் போடவில்லை. தென்கொரியாவில் தற்போது நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் வட மற்றும் தென் கொரிய நாடுகளின் வீராங்கனைகள் ஒன்றிணைந்து ஐஸ் ஹொக்கி அணியில் விளையாடுகின்றனர். இந்த அணி பங்கேற்ற போட்டிகளில் இதுவரையில் கோல்கள் எதனையும் போடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் அணியின் வீராங்கனைகள் திடமாகவும் நம்பிக்கையுடனும் போட்டிகளில் பங்கேற்று வருவதாக ஒன்றிய அணியின் பயிற்றுவிப்பாளரான கனடாவைச் சேர்ந்த சாரா முரெ ( Sarah Murray)தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த கொரிய அணி பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Members of the United States men’s hockey team practice ahead of the 2018 Winter Olympics in Gangneung, South Korea, Friday. (AP Photo/Kiichiro Sato)

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers