இந்தியா சினிமா பிரதான செய்திகள்

கேரள பாலக்காடு அரிசி அரவை ஆலை எம்.ஜி.ஆர். நினைவிடமாகறிது,,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரிசி அரவை ஆலை ஒன்று எம்.ஜி.ஆர். நினைவிடமாக மாற்றப்படுகிறது. பாலக்காடு மாவட்டத்தில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட அரிசி ஆலையே இவ்வாறு எம்.ஜி.ஆர். நினைவிடமாக மாற்றப்படுகிறது

இந்த ஆலை அமைந்துள்ள கிராமத்தில்தான் எம்.ஜி.ஆர் சிறு வயதில் வசித்த இல்லம் உள்ளதாகவும் எனவே, பழமைவாய்ந்த இந்த ஆலை எம்.ஜி.ஆர் நினைவிடமாக மாற்றப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிராமப்புற பாரம்பரிய மையமாகவும் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த மையத்துக்கு மகோரா எனப் பெயரிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகோரா என்பது மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்பதன் சுருக்கம் என்பதாகும். பாலக்காட்டின் பெருமைகளை உணர்த்தும் வகையில் புகைப்படக் காட்சியை வைப்பதுடன் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்., தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை தொடர்பான புகைப்படங்களையும் இந்த மையத்தில் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த மையம் வரும் சனிக்கிழமை கேரள கலாச்சார அமைச்சர் ஏ.கே.பாலனால் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply