இலங்கை பிரதான செய்திகள்

தீர்வின்றி ஒரு வருடத்தை எட்டுகிறது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் போராட்டம்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

கிளிநொச்சியில் கடந்த 20-02-2017 அன்று ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி இன்னும் ஜந்து நாட்களில் ஒரு வருடத்தை எட்டுகிறது.

இன்று(14) 360 வது நாளாக தொடர்ச்சியாக இரவு பகலாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே இவ்வாறு தீர்வின்றி ஒரு வருடத்தை பூர்த்தி செய்யவுள்ளது.

யுத்தகாலத்திலும் யுத்தம் நிறைவுக்குகொண்டு வரப்பட்ட பின்னரும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும், கடத்தப்பட்டும் என பல வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வருகின்ற 19-02-2018 அன்று ஒரு வருடத்தை எட்டுகிறது. எனவே ஒரு வருடத்தை எட்டியுள்ள நிலையில் எவ்வித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றப் போவதாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply