இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி வட்டக்கச்சியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டார்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (14.02.18) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வடக்கச்சி பத்து விட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 24 பாஸ்கரன் நிரோசா  வயதுடைய  என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. கிராமத்தில் நடைபெறவுள்ள பூப்புனித நீராட்டு விழாவுக்கு அயலவர்கள் சென்றிருந்த வேளை இக் கொலை இடம்பெற்றிருக்கிறது. குறித்த பெண் வீட்டிற்கு பின்புறமாக இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இறந்த பெண்ணுக்கு ஏழு வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகள் உள்ளனர். கணவர் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இராமநாதபுரம் காவற்துறையினர்  மேற்கொண்டு வருகின்றார்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.