இலங்கை பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – கிரான்ட்பாஸ் கட்டட அனர்த்தம் – புனரமைக்கும் நிறுவன உரிமையாளர் சரண்…

கிரான்ட்பாஸ் பகுதியில் ​நேற்றைய தினம் இடிந்து வீ​​ழ்ந்த கட்டடத்தை புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

நேற்று மாலை குறித்தக் கட்டடம் இடிந்து வீழ்ந்தமையில் இதில் சிக்குண்டு 7 பேர் பலியானதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில்அ னுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இதில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கால் ஒன்று சத்திரிசிகிச்சையின் போது அகற்றப்பட்டுள்ளதாக ​வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிராண்பாஸில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு…

Published on: Feb 14, 2018 @ 11:20

கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 பேராக அதிகரித்துள்ளது.  உயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழும்பு, கிராண்பாஸ் பபாபுள்ளே மாவத்தையில் தேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் பழமையான கட்டிடம் ஒன்று இன்று மாலை இடிந்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply