உலகம் பிரதான செய்திகள்

தென் ஆபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி ஜாகொப் சூமா (Jacob Zuma ) பதவி விலகியுள்ளார். ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து சூமா இவ்வாறு பதவி விலகியுள்ளார்.  தொலைக்காட்சியில் தோன்றி கருத்து வெளியிட்ட போது, பதவி விலகல் பற்றி அறிவித்துள்ள சூமா ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தீர்மானம் தொடர்பில் தமக்கு உடன்பாடு கிடையாது என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு முதல் சூமா, தென் ஆபிரிக்காவில் ஜனாதிபதியாக கடமையாற்றி வந்திருந்தார்.

மேலும் பதவிவிலகல் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் நகைச்சுவையாக உரையாடி, சிரித்துக் கொண்டே 75 வயதான சூமா தனது பதவிவிலகல் பற்றி அறிவித்தார். தமது பெயரைப் பயன்படுத்தி ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பிளவடைந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ள சூமா கட்சியின் மிக ஒழுக்கமான ஓர் உறுப்பினராகவே தாம் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap