இலங்கை பிரதான செய்திகள்

ஐ.தே.கவிற்கு எதிராக அரசாங்கம் அமைத்தால் ஆதரவளிக்கப்படும் – கூட்டு எதிர்க்கட்சி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக அரசங்கமொன்றை உருவாக்கினால் அதற்கு ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக அமைக்கப்படும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்பு இன்றி தனித்து அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அரசாங்கம் அமைக்கப்பட உள்ளது என்பது பற்றி தமக்கு தெரியாது என்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வாக்களிக்கப்பட்டால் அதற்கு பூரண அளவில் ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.