இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

பங்களாதேசுக்கெதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை வெற்றியீட்டியுள்ளது.

பங்களாதேசுக்கெதிரான   முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. டாக்காவில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி துடுப்பாடத் தீர்மானித்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களைப் பெற்றது. இதன் பின்னர் 194 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 16.4 ஓவரில் இலக்கினை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி எதிர்வரும்18ம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.