உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

இருபதுக்கு இருபது போட்டியில் 245 ஓட்டங்களை துரத்திப் பெற்று அவுஸ்திரேலியா சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் 245 ஓட்டங்களை துரத்திப் பெற்று அவுஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் 2-வது முறையாக போட்டியிட்டன.

நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 244 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 245 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.

இந்தநிலையில் இருபதுக்கு இருபது போட்டியில் 245 ஓட்டங்கள் என்ற இலக்கை  துரத்திப் பெற்ற முதல் அணி என்ற சாதனையை அவுஸ்திரேலியா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap