உலகம் பிரதான செய்திகள்

நியூயோர்க்கில் முன்னாள் ஆசிரியர் ஒருவரும் அவரது இரட்டைச் சகோதரரும் குண்டு தயாரித்த குற்றச்சாட்டில் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நியூயோர்க்கில் முன்னாள் ஆசிரியர் ஒருவரும் அவரது இரட்டைச் சகோதரர் ஒருவரும் குண்டு தயாரிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குண்டுத் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களும் ஆசிரியரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

27 வயதான கிறிஸ்டியன் டோரோ என்ற ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களைக் கொண்டு இந்த ஆசிரியர் வெடிபொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தானோ தனது சகோதரரோ குண்டு தயாரிப்பதற்கு முயற்சிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் ஆசிரியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.