குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மஹிந்த ராஜபக்ஸவினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன முன்னணியினால் நேரடியாக பெரிய தேர்தல் ஒன்றுக்கு சென்று வெற்றியீட்ட முடியாது என்பதனையே இந்த தேர்தல் முடிவுகள் பறைசாற்றி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். மஹிந்தவின் பிரதிநிதியொருவரினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய அளவிற்கு வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது என்பதே இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்
Spread the love
Add Comment