இலங்கை பிரதான செய்திகள்

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டதாக சுதந்திரக் கட்சி அறிவிக்கவில்லை – சபாநாயகர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டதாக ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியின் இதுவரையில் அறிவிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கடந்த 2015ம் ஆண்டில் தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டிருந்தது.

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய கேள்வி ஒன்றுக பதிலளித்தபோது அவர்இதனைத் தெரிவித்துள்ளார். ஊடங்களில் வெளியிடப்பட்ட செய்திகளுக்கு அமைய சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளதாக என கரு ஜயசூரியவிடம், தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியிருந்தார். எனினும், அவ்வாறான தகவல்கள் எதுவும் இதுவரையில் தமக்கு உத்தியோபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.