சினிமா பிரதான செய்திகள்

நெருப்புடா புகழ் அருண் – நண்பனுக்கு தோள்கொடுக்கும் சிவகார்த்திகேயன்


நடிகர் சிவகார்த்திகேயன் தனது நெருங்கிய நண்பனின் திரைப்படத்தை தயாரிப்பதன் மூலம்  தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தனது புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தனது நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது.
சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றிய போது எல்லா நிலைகளிலும் என்னுடன் இருந்த, என் நண்பர்களின் கனவையும் புரிந்து கொள்வது என் கடமையாக உணர்கிறேன் என்று கூறிய சிவகார்த்திகேயன்  இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மிகவும் திறமையானவன் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறான் என்றும் கூறியுள்ளார்.

நானும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் என்பதால் அருண் கதையை என்னிடம் சொன்னபோது என்னால் அந்த கதையை என்னோடு பொருத்தி பார்க்க முடிந்தது என்றும் அவர் கூறினார். சத்யராஜ் தந்தையாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாகவும் நடிக்கும் இந்தப் படத்தில் இளவரசு, ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியில் இந்த திரைப்படத்திற்கான பூஜையுடன்  செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் இயக்கும் அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மூவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.