சினிமா பிரதான செய்திகள்

விண்ணைத்தாண்டி வருவாயா 2இல் சிம்புவின் இடத்தில் மாதவன்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்ததாக தெரிவித்த புதிய படத்தில் அவருக்கு பதிலாக மாதவன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா, நடிப்பில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தநிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2-ம் பாகம் குறித்து விழா ஒன்றில் பேசிய கவுதம் மேனன் அப்படத்தில் கார்த்தி மறுபடியும் ஜெஸ்ஸியை 7 ஆண்டுகள் கழித்து சந்திப்பது தான் கதைக்களமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்

எனினும் விண்ணைத்தாண்டி வருவாயா பாகம் 2இல் சிம்புவுக்கு பதிலாக மாதவன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை மாதவன் தன் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மாதவனின் சினிமா பயணத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கவுதம் மேனன் – மாதவன் கூட்டணியில் வெளியான மின்னலே சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.