Home இந்தியா கலாமின் வீடும் கமல்ஹாசனின் அரசியல் பயணமும் தமிழகத்தின் பரபரப்பும்….

கலாமின் வீடும் கமல்ஹாசனின் அரசியல் பயணமும் தமிழகத்தின் பரபரப்பும்….

by admin


இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல்ஹாசனை, கலாமின் பேரன சலீம் வரவேற்று வீட்டிற்கு அழைத்து சென்றார். நடிகர் கமல்ஹாசன் கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசி பெற்றார். தங்களின் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு கலாமின் படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை கலாமின் பேரன் வழங்கினார். அப்துல்கலாம் வீட்டிற்கு கமல் சென்றிருப்பதை முன்னிட்டு அங்கு ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.

முன்னேற்றம்தான் கமலின் அரசியல் நோக்கம்.. கலாம் பேரன்!
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் மக்கள் முன்னேற்றத்தை சார்ந்தது என்று அப்துல் கலாம் பேரன் ஷேக் தாவுத் பேட்டி அளித்து இருக்கிறார்.  இதுகுறித்து கமல் டிவிட் செய்துள்ளார்.

அதில் ”பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து அப்துல் கலாம் பேரன் ஷேக் தாவுத் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் தனது பேட்டியில் ” கமலின் அரசியல் முன்னேற்றம் சார்ந்தது. அவர் மக்கள் முன்னேற்றம் குறித்தும், நாட்டின் முன்னேற்றம் குறித்தும் என்னிடம் பேசினார் ” எனக் கூறியுள்ளார்.

அப்துல்கலாம் கற்ற பாடசாலை  மாணவர்களை சந்திக்க அரசு தடை விதித்தது.
அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த பாடசாலைக்கு  சென்று மாணவர்களை சந்திக்க அரசு தடை விதித்தது. இதனால் கலாம் படித்த பாடசாலையை கமல்ஹாசன் பார்வையிடவில்லை. கமல்ஹாசன் அரசியல் பயணத்தை அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து இன்று காலை தொடங்கினார். இதையடுத்து மண்டபத்தில் உள்ள அப்துல் கலாம் படித்த பள்ளியில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மாணவர்களை சந்தித்து கமல்ஹாசன் கலந்துரையாட இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து கலாம் பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாட கமல்ஹாசனுக்கு காவற்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், கலாம் படித்த பாடசாலையை பார்வையிடவில்லை. அப்பாடசாலை முன்பாக ஏராளமான பாவற்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கலாம் படித்த பாடசாலை முன்பாக கமல்ஹாசன் வாகனம் சென்ற போது அதில் நின்றபடியே ரசிகர்களை பார்த்து கை அசைத்துவிட்டு கமல்ஹாசன் புறப்பட்டார். அப்பகுதியில் இந்து முன்னணியினரும் கமல் ரசிகர்களும் குவிந்திருந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

கமலுக்கு ஆரவ், வாழ்த்து

பிக் பாஸ் டியர் கமல் ஹாஸன் சாருக்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு நல்ல தலைவர் தேவை. அது நீங்களாக தான் இருக்க முடியும் என்று பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் ட்வீட்டியுள்ளார்.

ஆதவ் கண்ணதாசன்
அனைவரும் அரசியல்வாதியை போய் சந்திக்கும்போது இங்கு ஒரு அரசியல்வாதியோ அவராக சென்று அனைவரையும் சந்தித்து பேசுகிறார். நல்லதே நடக்கட்டும் என்கிறார் ஆதவ் கண்ணதாசன்.

நடிகர் விவேக் 
வாழ்த்து இன்று முதல் கலாம் தலத்தில், புதிய தளத்தில், வளம் சேர்க்கக், களம் காணப் புறப்படும் கமல் அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துக்கள் என நடிகர் விவேக் வாழ்த்தியுள்ளார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி.
நீ பார்க்க விரும்பும் மாற்றமாக இருப்பாய். நமக்காக மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் கமல் ஹாஸன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ட்வீட்டியுள்ளார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி.

தமிழ்நாட்டு அரசியல் மாறப்போகிறதா?.. கமல் குறித்து கிரிக்கெட்டர் அஸ்வின் டிவிட்!

”தமிழ்நாட்டின் இன்னொரு சூப்பர் ஸ்டார் இன்று மாலை தன்னுடைய கட்சியை தொடங்குகிறார். ஒருவேளை தமிழக அரசியல் மொத்தமாக மாற போகிறதோ?” என்று கேள்வியும், ஆச்சர்யமும் கலந்து எழுதியுள்ளார்.

கமல் பின்னால் ஒன்று திரண்ட ராமேஸ்வரம் மீனவர்கள்.. உற்சாக சந்திப்பு!
மீனவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். ராமேஸ்வரத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இன்று மாலை கட்சிப் பெயரையும் சின்னத்தையும் நடிகர் கமல் அறிவிக்க உள்ளார்.

இந்நிலையில் ராமேஸ்வரம் கணேஷ் மகாலில் மீனவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது எனது மீனவ நண்பர்களை சந்திக்க வந்துள்ளதாக கூறி தனது உரையை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்.

மீன்பிடி தொழிலும் ஒன்று அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது என்ற அவர், தமிழகத்தின் மிக முக்கிய தொழில்களில் மீன்பிடி தொழிலும் ஒன்று என்றார். மீனவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

திசை திருப்புகிறார்கள் அரசுகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு சென்றுவிட்டன என்றும் வாக்குறுதியை நிறைவேற்றாத போது கேள்விகேட்டால் திசைதிருப்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அரசின் கடமை கேள்வி கேட்டால் தடியடி நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தடியடி நடத்தி பதில் சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். கேள்வி கேட்டால் பணிவுடன் பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை என்றார்.

எங்களின் கடமை கடல் மேலாண்மை, சர்வதேச சட்டங்களை மதிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்களின் கடமை என்றும் கமல் கூறினார்.

 கமல்ஹாசனின்  பாதுகாப்பு பணியை முன்னாள் ஐ.ஜி. ஏஜி மவுரியா ஏற்றார்..

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் மாநாடு மற்றும் பயணத்தின் பாதுகாப்பு பணியை முன்னாள் ஐ.ஜி. ஏஜி மவுரியா கவனித்துக் கொண்டு இருக்கிறார். இதற்காக தனி படையும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இன்று தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். அவர் இன்று மதுரையில் அரசியல் மாநாடும் நடத்த உள்ளார்.

தலைமை பாதுகாப்பு பணியின் தலைமை பொறுப்பை முன்னாள் ஐ.ஜி.ஏஜி மவுரியா கவனித்துக் கொண்டு இருக்கிறார். இதற்காக இவர் கமல் மதுரை செல்வதற்கு முன்பே சென்று இருக்கிறார். அங்கு இருந்து மதுரையில் விழா நடக்கும் இடம், கலாம் இல்லம் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகளை செய்வார்.

யார் இவர் ஏஜி மவுரியா முன்னாள் ஐபிஎஸ். இவர் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் ஆவார். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் ஐ.ஜியாக பணியாற்றி இருக்கிறார்.

பலத்த பாதுகாப்பு இதேபோல் பாதுகாப்பு பணியில் இரண்டு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் முக்கிய பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிடுவார்கள். அதேபோல் 20க்கும் அதிகமான தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மக்களை சந்திக்கிறார் இன்று கமல் மக்களை சாலைகளில் சந்திக்க இருக்கிறார். இதனால் மேற்பக்கம் திறக்க கூடிய கார் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த காரில் உட்பக்கம், வெளிப்பக்கம் என மொத்தம் 4 கேமராக்கள் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு இருக்கிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More