உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாதனை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க வீராங்கனை மரிட் பிஜோர்ஜன் ( Marit Bjorgen )சாதனை படைத்துள்ளார். குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மரிட் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் ஏதேனும் ஓர் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்றுள்ளதுடன் மொத்தமாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 14 பதக்கங்கள் வென்றுள்ளார். மகளிருக்கான டீம் ஸ்பிரின்ட் போட்டியில் மரிட் உள்ளிட்ட அமெரிக்க வீராங்கனைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள மற்றுமொரு போட்டியிலும் மரிட் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கனை வென்ற வீராங்கனை என்ற சாதனை மகிழ்ச்சியளிப்பதாக மரிட் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.