குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்காவில் காவல் நிலையத்திற்குள், இனந்தெரியாத நபர்கள் பிரவேசித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்களும், ஒரு இராணுவப் படைவீரரும் கொல்லப்பட்டுள்ளனர். தென் ஆபிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தின் உமாடாவிற்கு அருகாமையில் அமைந்துள்ள காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்கள், மரண தண்டனை விதிக்கும் பாணியில் காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆயுதம் தாங்கிய கள்வர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல் நிலையத்திற்குள் பிரவேசித்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிகளை களவாடியுள்ளதுடன் வாகனம் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment