இந்தியா பிரதான செய்திகள்

வட்ஸ் அப்பில் சிறுமிகளை வைத்து ஆபாசப்படங்கள் வெளியிட்டு வந்த 119 பேர் கொண்ட குழு சிக்கியுள்ளது


வட்ஸ் அப்பில் சிறுமிகளை வைத்து ஆபாசப்படங்களை வெளியிட்டு வந்த 119 பேர் கொண்ட பெரிய கும்பல் சிபிஐயிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கும்பலின் நிர்வாகியாகக் கருதப்படும் உத்தரபிரதேச மாநிலத்தினைச் சேர்ந்த 20 வயதான நிகில் வர்மா என்பவரை சிபிஐ கைது செய்துள்ளதாகவும் இந்த வட்ஸ் அப் குழுவின் ஏனைய நிர்வாகிகள் என் சந்தேகிக்கப்படும் மேலும் சிலரும் சிபிஐ வலையில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக்குழுவினர் கிட்ஸ் டிரிபிள் எக்ஸ் என்ற பெயரில் சிறுவர்களை வைத்து ஆபாசப் படங்களை வெளியிட்டு வந்துள்ளனர் எனவும் இலங்கை, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, மெக்சிகோ, நியூஸிலாந்து, சீனா, நைஜீரியா, பிரேசில், கென்யா ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த குழுவில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவல்கள் மேற்குறித்த ஏனைய நாடுகளுக்கும் அனுப்பபட்டு இவர்கள் மீது நடவடிக்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers