உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

கென்யா கிரிக்கெட் அணியின் தலைவரும் பயிற்சியாளரும் பதவி விலகியுள்ளனர்.

கென்யா கிரிக்கெட் அணியின் தலைவர் ரகேப் பட்டேலும் ( Rakep Patel) பயிற்சியாளா தோமஸ் ஒடோயோவும் ( ( Thomas Odoyo  )வும் பதவி விலகியுள்ளனர். உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான பிரிவு2 தொடரில் மோசமாக விளையாடியதன் காரணமாகவே இவர்கள் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளுக்கே நேரடியாக போட்டியில் கலந்து கொள்ளும் தகுதி கிடைக்கும். ஏனைய இரண்டு அணிகள் தகுதிச் சுற்றின் அடிப்படையில் தேர்வாகும். இந்த தகுதிச் சுற்று சிம்பாப்வேயில் நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்து கொள்வதற்கான போட்டித் தொடரொன்று நடைபெற்றது.

இந்தத் தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளிலும் கென்யா அணி தோல்விபெற்றதனை அடுத்தே அவர்கள் இருவரும் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.